வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகை கொள்ளை!
Pudukkottai King 24x7 |16 Oct 2024 3:49 AM GMT
குற்றச்செய்திகள்
விராலிமலை ஒன்றியம் மாத்துார் அருகே உள்ள இச்சிக்காமலைபட்டியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி(43). கணவர் முருகேசன் கரோனா தாக்கத்தால் உயி ரிழந்த நிலையில் 2 பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த 11ம் தேதி பிள்ளைகளுடன் சொந்த ஊரான துாத்துக்குடிக்கு சென்றார். நேற்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள், 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரி யவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மாத்துார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story