பரமத்திவேலூர் அருகே பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து மூன்று லட்ச ரூபாய் ரொக்க பணம் மற்றும் 2.5 பவுன் தங்க நகை கொள்ளை.

பரமத்திவேலூர் அருகே உள்ள வெள்ளாளபாளைத்தில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து மூன்று லட்ச ரூபாய் ரொக்க பணம் மற்றும் 2.5 பவுன் தங்க நகை கொள்ளை. பரமத்தி போலீசார் விசாரணை.
பரமத்திவேலூர்:அக்.21: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (48) ஏசி மெக்கானிக், அவரது மனைவி கீதா. இவர்களது வீடு நாமக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ளது. நேற்று காலை 8 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். மீண்டும் மாலை 7 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கண்ணன் வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைத்திருந்த ரூ .மூன்று லட்சம் ரொக்க பணம் மற்றும் 2.5 பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து பரமத்தி போலீசருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் இந்திராணி உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் சம்பவம் குறித்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் மக்கள் மற்றும் வாகன போக்குவரத்து நிறைந்த பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பரமத்தி சுற்று பகுதியில ஆட்கள் இல்லாத வீடுகளை குறிவைத்து பகல் நேரத்தில் கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டுவது தொடர்கதையாக இருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
Next Story