அரியலூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விசிக -வினர் 25 பேர் கைது
Ariyalur King 24x7 |19 Dec 2024 11:22 AM GMT
அரியலூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விசிக -வினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர், டிச.19- மாநிலங்களவையில்,சட்ட மேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து அரியலூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 25 பேர் கைது செய்யப்பட்டனர். அக்கட்சியின் மாவட்டச் செயலர் அங்கனூர் சிவா தலைமையில், ரயில் நிலையத்துக்கு திரண்டு வந்த நிர்வாகிகளை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி 25 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர். போராட்டத்தின் போது அவர்கள், உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். வாலாஜாநகரம்.... அரியலூர் அடுத்த வாலாஜாநகரம் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய நிர்வாகி சசிக்குமார் உள்ளிட்ட 8 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
Next Story