குமரி: குடோனுக்கு வந்த 25 டன் ரேஷன் அரிசி லாரியுடன் மாயம்
Nagercoil King 24x7 |22 Dec 2024 5:42 AM GMT
நித்திரவிளை
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (41) என்பவர் தமிழ்நாடு சிவில் சப்ளையில் ரேஷன் அரிசியை குமரி மாவட்டத்தில் உள்ள குடோன்களுக்கு கனரக வாகனங்களில் கொண்டு சேர்க்க ஒப்பந்தம் எடுத்துள்ளார் அதன்படி நெல்லை மாவட்டம் முத்தூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிவில் சப்ளை குடோனில் இருந்து கடந்த 16ஆம் தேதி நித்திரவிளை அருகே நம்பாளி பகுதியை சேர்ந்த சுரேஷ் (40) என்பவருக்கு சொந்தமான டாரஸ் லாரியில் 25 டன் ரேஷன் அரிசியை ஏற்றி காப்புக்காடு பகுதியில் உள்ள குடோனுக்கு அனுப்பி வைத்துள்ளனர். சுரேஷ் லாரியை ஓட்டி வந்துள்ளார். அரிசி நேற்று முன்தினம் இரவு வரை காப்புக்காடு குடோனுக்கு வந்து சேரவில்லை. சுரேஷை செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் அழைப்பை ஏற்கவில்லை. சுரேஷின் வீடு நித்திரவிளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் இது சம்பந்தமாக ஹரிஹரன் நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். மேலும் சுரேஷ் வீட்டில் போலீசார் சென்று பார்த்தபோது அவர் லாரியுடன் மாயமாகிள்ளது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் குமரி கேரள எல்லையில் உள்ள செங்கவிளைப் பகுதியில் தமிழக ரேஷன் அரிசி வாங்கும் ஒரு கடையில் 25 டன் ரேஷன் அரிசியை விற்பனை செய்ததாக பொதுமக்கள் மத்தியில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Next Story