விக்கிரவாண்டியில் 25 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

X
விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1997--99ம் ஆண்டு பிளஸ் 2 காமர்ஸ் வகுப்பில் படித்த மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். முன்னாள் மாணவர்கள் விஜயன், விஜி, ஏழுமலை, முத்து முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் ரகு வரவேற்றார்.நிகழ்ச்சியில் முன்னாள் ஆசிரியர்கள் ராஜேந்திரன், லாரன்ஸ், மகாலிங்கம் மதியழகன் ,ஜார்ஜ், ரகமத்துல்லா தேவராஜ், ஆதித்யன் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவர்களை வாழ்த்தி பேசினர்.முன்னாள் மாணவர்கள் ஜெயவேல், பிரபு ராம் ,செழியன் ஆகியோர் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தனர். முடிவில் முன்னாள் மாணவர் கந்தன் நன்றி கூறினார்.
Next Story

