புதூரில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக கூறி 25க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்றுவதாக பொதுமக்களுக்கு வருவாய்த் துறையினர் நோட்டீஸ்..,
Virudhunagar King 24x7 |22 Jan 2025 8:56 AM GMT
புதூரில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக கூறி 25க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்றுவதாக பொதுமக்களுக்கு வருவாய்த் துறையினர் நோட்டீஸ்..,வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்..*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள புதூரில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக கூறி 25க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்றுவதாக பொதுமக்களுக்கு வருவாய்த் துறையினர் நோட்டீஸ்..,வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குன்னூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட K.புதூர் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வெண்ணிக் கொண்டான்குளம் கண்மாய்யின் ஒரு பகுதியினை 66 சதுர மீட்டர் பரப்பளவில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருப்பதாக கூறி வத்திராயிருப்பு பொதுப்பணித்துறையினர் ஆக்கிரமித்துள்ள இடத்தினை காலி செய்யக்கோரி பொதுமக்களுக்கு கடந்த இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். தொடர்ந்து இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பி ஆக்கிரமப்புகளை காலி செய்யாமல் உள்ளவர்களுக்கு அரசு காலி செய்தால் அதற்கான செலவுத்தொகையினை தங்களிடம் வசூலிக்கப்படும் என பொதுப்பணித்துறையினர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதனை கண்டித்து அப்பகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஸ்டாலின் அரசு நிர்வாகத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இதில் தங்கள் பகுதியில் கடந்த மூன்று தலைமுறைகளுக்கு மேலாக வசித்து வருவதாகவும் தங்களுக்கு இப்பகுதியில் தான் வேலை வாய்ப்புகள் இருக்கிறது எனவும் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இப்பகுதியில் தான் உள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும் தாங்கள் நீர்நிலைகள் ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பதாக கூறப்படும் அதே அரசுதான் தங்களுக்கு தேவையான சாலை, வாருகால், தெருவிளக்கு,குடிநீர் மற்றும் வீடுகளுக்கு உண்டான தீர்வை மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது. தற்போது தங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருப்பதாக கூறி தங்கள் வசிக்கும் வீடுகளையும் தங்கள் பகுதியில் உள்ள கோவில்களையும் இடிப்பதற்கு பொதுப்பணித்துறையினர் தங்களை நெருக்கடி கொடுப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் தங்கள் குடியிருக்கும் பகுதியினை அகற்றுவதை கைவிட்டு தங்களுக்கு குடியிருக்கும் இடங்களுக்கு பட்டாக்களை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story