பூதலூர் வடக்கு ஒன்றியத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 25 பேர் சிபிஎம்மில் இணைந்தனர் 

அரசியல்
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர்  வடக்கு ஒன்றியத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாட்டு விளக்கப் பேரவை கூட்டம் கரிகாலன் திருமண மண்டபத்தில், கட்சி மாவட்டக்குழு உறுப்பினர்  பி.கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.  இதில், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினரும், மாநிலக்குழு உறுப்பினருமான எம்.சின்னத்துரை,  மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.வி.கண்ணன், கே.அபிமன்னன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.எம். இளங்கோவன், திருவையாறு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா ஆகியோர் விளக்க உரையாற்றினர்.  இதில், ஒன்றிய நிர்வாகத்தை நடத்த 11 பேர் கொண்ட புதிய அமைப்புக் குழு தேர்வு செய்யப்பட்டது. மேலும், பல்வேறு கட்சிகளில் இருந்து 25 பேர் விலகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
Next Story