ராசிபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 25.ஆயிரம் அபராதம் ..

X
Rasipuram King 24x7 |20 March 2025 7:30 PM ISTராசிபுரத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 25.ஆயிரம் அபராதம் ..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆத்தூர் சாலை, புதிய பேருந்து நிலையம் பின்புறம் தட்டான்குட்டை சாலை பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை குறித்து சுகாதார அலுவலர் மு.செல்வராஜ் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது 400 கிராம் அளவுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடையில் கைப்பற்றப்பட்டது. விற்பனை செய்த கடைக்கு ரூ. 25000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வில் கோவிந்தராசன் ஆய்வாளர், பன்னீர்செல்வம் மேற்பார்வையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Next Story
