அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 25 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது

குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து மாவட்டத்தில் இதுபோன்று உங்கள் அருகில் இருக்கும் கடைகளில் விற்றாலோ உடனடியாக காவல்துறையினைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்
அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 25 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி இன்று 26.03.2025 பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல் சரகத்திற்குட்பட்ட பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் எளம்பலூர் கிராமத்தில் *மகேந்திரன் (29) த/பெ கோவிந்தசாமி, வடக்குத்தெரு, எளம்பலூர், பெரம்பலூர் மாவட்டம். என்பவர் எளம்பலூர் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் தனிப்படையினர் எதிரியை கைது செய்து விசாரணை செய்ததில் அவரிடமிருந்து *1.ஹான்ஸ் 25 பண்டல் ( 7.500 kg), 2.விமல் பாக்கு 19 பண்டல் ( 1.4250 kg), 3. கூல் லீப் 15 பண்டல் (1.500 கிராம்) 4. V1 பான் மசாலா 24 பண்டல் (2.520 kg) என மொத்தம் – 12.945 கிலோகிராம் எடையுள்ள 19,200 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தும் மேலும் பெரம்பலூர் - துறையூர் ரோட்டில் உள்ள அரசு பள்ளி அருகே சட்டத்திற்கு புறம்பாக குட்கா பொருட்களை விற்பனை செய்த பிச்சைமணி (33) த/பெ ராமச்சந்திரன், வேப்பந்தட்டை, பெரம்பலூர் மாவட்டம். என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.ஹான்ஸ் 25 பண்டல் ( 7.500 kg), 2.விமல் பாக்கு 19 பண்டல் ( 1.4250 kg), 3. கூல் லீப் 15 பண்டல் (1.500 கிராம்) 4. V1 பான் மசாலா 24 பண்டல் (2.520 kg) என மொத்தம் – 12.945 கிலோகிராம் எடையுள்ள 19,200 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து மேற்படி எதிரிகள் இருவரையும் பெரம்பலூர் காவல்நிலைய காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story