தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி) 25வது பட்டமளிப்பு விழா

தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி(தன்னாட்சி) 25வது பட்டமளிப்பு விழா பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) யின் 25வது பட்டமளிப்பு விழா 05.04.2025அன்று கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் அ. சீனிவாசன் தலைமைவகிக்க, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் அனந்தலட்சுமி கதிரவன் முன்னிலை வகித்து பட்டமளிப்பு விழாவினைத் தொடங்கிவைத்தார். தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி முதல்வர் பேராசிரியர் உமாதேவி பொங்கியா வரவேற்புரை வழங்கி பட்டமளிப்பு விழா அறிக்கையைச் சமர்ப்பித்தார்;. இதனைத் தொடர்ந்து, மாண்பமைவேந்தர் உரையாற்றும் போது மூன்று வருடம் பட்டம் மற்றும் ஐந்து வருடபட்டம் பெறுவதற்கு உங்களுடைய தாய் தந்தை முதற் காரணம் எனக் கூறியதுடன் வாழ்க்கை செம்மையுறவும் திறம் படசெயல்படவும் உங்களை தூண்டுவது பெற்றோர்களே என பேசினார். வாழ்வின் உயர்ந்த இடத்தை அடைவதற்கான வழியாக நீங்கள் நீங்களாக இருக்கவேண்டும் என்பதனை வலியுறுத்தியதுடன் நமது வாழ்வின் வெற்றிக்கு விடாமுயற்சி, பட்டறிவு, தன்னம்பிக்கை, விட்டுக்கொடுத்தல், பெரியோர்களை மதித்தல் மற்றும் படிப்பறிவு எனும் முறையில் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்று தமது வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டு பட்டம் பெறும் மாணவிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார். இணை வேந்தர் வாழ்த்துரை வழங்குகையில் மாணவிகளிடம் தாம் தேர்வு செய்யும் துறையை முதன்மை துறையாகத் தேர்ந்தெடுத்து, அந்த துறையில் உச்ச நிலையை அடைய மாற்று வழிகளை நீங்கள் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று கூறியதுடன், உங்களுடைய இலட்சியம் மற்றும் நோக்கத்தை அடைவதற்கு நேர்த்தியாகச் செயல்பட வேண்டும் என்றும் கூறினார். முதல்வர் பட்டமளிப்புவிழாஅறிக்கையில், ‘கல்வித் துறையில் மிகவும் பின்தங்கி இருந்த பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத்தரம் மேம்படவேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, 1996 ஆம் ஆண்டில் 45 மாணவிகளையும், 9 பேராசிரியர்களையும் கொண்டுதுவங்கப் பெற்ற இந்நிறுவனம் இன்று ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டமாணவ மாணவிகளைக் கொண்டு இயங்கிவருகிறது. 2018 ஆம் ஆண்டு தமிழகத்திலேமுதல் முறையாக 10 வருடங்களுக்கான தன்னாட்சி அங்கீகாரத்தைப் பெற்ற முதல் கல்லூரி நம் மகளிர் கல்லூரி. ஆளுமைதிறன் மிக்க பெண்களை உருவாக்குவதற்காக நிர்வகிக்கப்பட்ட இக்கல்லூரியில் வருகின்ற 2025-2026-ஆம் கல்விஆண்டில் பெண்களுக்கான முதல் சட்டக்கல்லூரி துவங்க இருக்கிறது என்பதை பெரும் மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். தேசிய தரநிர்ணயக் குழுவின் மறுமதிப்பீட்டில் A++சான்றிதழையும்;, 3000 கல்லூரிகள் பங்குபெற்ற தேசியத் தரகட்டமைப்பில் இந்திய அளவில் 44-வது இடத்தையும், இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் தமிழ் நாட்டில் யு.கே.வி தமிழா என்ற யூடியூப் சேனல் மூலம் 2024ஆம் ஆண்டு தேசியதரக் கட்டமைப்பின் அடிப்படையில் கலை அறிவியல் படிப்புகளைப் படிப்பதற்குசிறந்த 25 கல்லூரிகளின் பெயர் பட்டியலில் 15-வது இடமாக நம் கல்லூரிக்கு அந்தஸ்து கிடைத்துள்ளது, என்று பெருமைக்குரியதாகக் கூறினார். மேலும், ஏழு ஆராய்ச்சி துறைகளில் பேராசிரியர்கள் மாணவிகளின் ஆளுமையாய் இருந்து ஆளுமையை உருவாக்குவதில் முனைப்போடு இக்கல்லூரியில் செயல்படுகின்றனர். கோயம்புத்தூர், பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இணைப் பேராசிரியர் மற்றும் முன்னாள் முதல்வர் முனைவர் ர.ராஜேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டார். அவர் தம் உரையில், ‘கல்வி, வேலைவாய்ப்பு, ஆராயிச்சி மற்றும் தொழில் முனைவு போன்ற துறைகளில் இக்கல்லூரியின் வளர்ச்சியைக் கண்டு பாராட்டினார், பட்டதாரிகள் வாழ்நாள் முழுவதும் கல்விமேம்பாட்டில்; பெற்றோர்களின் வழிகாட்டிகளாக அவர்களின் கொள்கைகளைத் தம்பாதையாக எடுத்துக்கொண்டு, கல்லூரிக்கும் சமுதாயத்திற்கும் தாங்கள் நன்றியுள்ளவராகப் பணியாற்ற வேண்டும் என்று சிறப்புரையாற்றினார். மேலும், மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து மாணவிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 1036-க்கும் மேற்பட்டமாணவிகள் பட்டங்களைப் பெற்றனர். அவர்களில், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தரவரிசை பட்டியலில் 23 மாணவிகளும் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியின் (தன்னாட்சி) தரவரிசை பட்டியலில் 42 மாணவிகளும் சிறப்பான இடத்தைப் பெற்று கல்லூரியின் பெருமையை நிலைநாட்டினர். இவ்விழாவில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு அதிகாரி தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் அனைத்து முதல்வர்கள், புலமுதன்மையர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டு பட்டமளிப்புவிழாவினைச் சிறப்பித்தார்கள்.
Next Story

