கோவை: அக்னிவீர் 25-வது தொகுதிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு !

X
இந்திய ராணுவத்தின் அக்னிவீர் திட்டத்தின் கீழ் 25-வது தொகுதி ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கோவை ராணுவ ஆட்சேர்ப்பு பிரிவு அதிகாரி கர்னல் அங்குல் வர்மா தெரிவித்துள்ளார். கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், கிளார்க்/ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், டிரேட்ஸ்மேன் (10 மற்றும் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி) ஆகிய பிரிவுகளுக்கு joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறையில் முதலில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, பின்னர் உடற்தகுதித் தேர்வு (1.6 கி.மீ ஓட்டம், புஷ்-அப்ஸ், சிட்-அப்ஸ்), மருத்துவ பரிசோதனை மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவை நடைபெறும். தேர்வு வெளிப்படைத்தன்மையுடன், தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நடத்தப்படும். கூடுதல் தகவல்களுக்கு இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும். நுழைவுத் தேர்வுகள் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். தகுதி வாய்ந்த இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கர்னல் அங்குல் வர்மா வலியுறுத்தியுள்ளார்.
Next Story

