தனியார் பள்ளிகளில் 25% இலவச மாணவர் சேர்க்கை - விண்ணப்ப பதிவு அடுத்த வாரம் தொடக்கம்

தனியார் பள்ளிகளில் 25% இலவச மாணவர் சேர்க்கை - விண்ணப்ப பதிவு அடுத்த வாரம் தொடக்கம்
X
தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ திட்டத்தில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு அடுத்த வாரத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதுள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 5 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இதற்கிடையே வரும் கல்வியாண்டு்க்கான (2025-26) இலவச சேர்க்கைக்கு இணைதள விண்ணப்பப் பதிவு ஏப். 3-வது வாரத்தில் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Next Story