கோவில்பட்டியில் டாஸ்மாக் கடை உடைத்து 25 மதுபாட்டில்கள் திருடிய மர்ம ஆசாமிகள்

கோவில்பட்டியில் டாஸ்மாக் கடை உடைத்து மதுபாட்டில்கள் திருடிய மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் அரசின் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் மேற்பார்வையாளராக ஜெயராமசந்திரன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். டாஸ்மாக் அருகே கணேஷ் குமார் என்பவர் பார் நடத்தி வருகிறார்.டாஸ்மக் கடையின் மேற்பார்வையாளர் ஜெயராமசந்திரன் நேற்று இரவு வழக்கம் போல கடை அடைத்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலையில் கடையின் போட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த பொதுமக்கள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் மற்றும் கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். டாஸ்மார்க் கடையை உடைத்து 25 மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். மேலும் டாஸ்மாக் கடையில் வைத்திருந்த ஐந்து ரூபாய் சில்லறை நாணயங்கள் பிளாஸ்டிக் பிளாஸ்டிக் பையை பகுதியில் வீசி சென்றுள்ளனர். மேலும் டாஸ்மாக் கடையில் இருந்த 50 ரூபாய் நோட்டுக்களையும் கிழித்து வீசி சென்றுள்ளனர். அருகில் இருந்த பாரில் பூட்டை உடைக்க முடியவில்லை என்பதால் பாரின் மேற்கூரையில் இருந்த இடைவெளி வழியாக இறங்கி உள்ளனர். ஆனால் அங்கு எந்த பொருளையும் திருட முடியவில்லை என்பதால் அங்கிருந்து சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை உடைப்பது மட்டுமின்றி ஹார்ட் டிஸ்கையும் கையோடு கொண்டு சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி நடிகர் வடிவேலு திரைப்படம் காமெடி காட்சி போல தடயம் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மிளகாய் பொடியையும் துவி சென்றுள்ளனர். கைரேகை நிபுணர்கள் கடையில் ஆய்வு மேற்கொண்டனர் .இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story