தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் ரூ.2.5 கோடி செலவில் சீரமைப்பு பணிகள் மாநகராட்சி மேயர் ஆய்வு

தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில்  ரூ.2.5 கோடி செலவில் சீரமைப்பு பணிகள்  மாநகராட்சி மேயர் ஆய்வு
X
மேயர் ஆய்வு
தஞ்சை புதிய பேருந்து நிலையம் கடந்த 1995-ஆம் ஆண்டு எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்த போது திறக்கப்பட்டது. அதன்பிறகு அவ்வப்போது சில சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. தற்போது மிகவும் மோசமடைந்து இருப்பதால் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் முயற்சியால் பல கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் செய்ய நிதி தமிழக அரசிடம் கேட்டுள்ளார்.  இதுகுறித்து சட்டசபையில் மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் கே.என்.நேரு தஞ்சை புதிய பேருந்து நிலையம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு இடையில் அவசர பணிகள் ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.  இதுகுறித்து  மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன் தஞ்சை புதிய பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையம் ஆகியவற்றில் திங்கள்கிழமை காலை ஆய்வு செய்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் மேயர் கூறியதாவது:- தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பின்னர் திருச்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும். மாநகர பேருந்துகள் ஆம்னி பேருந்து நிலையம் அருகில் உள்ள பகுதிக்கு மாற்றப்படும். புதிய பேருந்து நிலையத்திற்குள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அவைகள் புதிய பேருந்து சுற்றுச்சுவர் அருகே செல்ல வழி அமைத்து தரப்படும். பொதுமக்கள் கழிப்பறை வசதிகள் கேட்டுள்ளனர். இதுகுறித்து அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்" இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் கண்ணன்,  துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மண்டலக் குழு தலைவர் கலையரசன்,  மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், உதவி செயற் பொறியாளர் மனோகரன் ,உதவி பொறியாளர் பிரதான்பாபு, சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (கும்பகோணம் கோட்டம்) மேலாளர்கள் தமிழ்ச்செல்வன், ராஜேஷ், தஞ்சை கிளை மேலாளர்கள் பிரகாஷ், சந்தனராஜ், சரவணகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Next Story