போக்சோ குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

X
கடந்த 2018 ஆம் ஆண்டு செண்பகராமன் புதூர் பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக ஆரல்வாய்மொழி, சமத்துவபுரம், கங்கை தெருவை சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் மகேஷ் (18) மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையம் போசோ வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் 3000/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்கள். நீதிமன்ற வழக்கு விசாரணை சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த இவ்வழக்கின் புலன்விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர், நீதிமன்ற காவலர், இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையை முறையாக கண்காணித்த நாகர்கோவில் உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை எஸ் பி வெகுவாக பாராட்டினார்.
Next Story

