போக்குவரத்து காவல் பிரிவைச் சேர்ந்த 25 பேருக்கு சொந்தச் செலவில், குளிர் கண்ணாடி வழங்கிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் 

போக்குவரத்து காவல் பிரிவைச் சேர்ந்த 25 பேருக்கு சொந்தச் செலவில், குளிர் கண்ணாடி வழங்கிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் 
X
குளிர் கண்ணாடி
தஞ்சாவூருக்கு முதல்வர் வருகையின் போது சிறப்பாக பணியாற்றிய போக்குவரத்து காவல் பிரிவைச் சேர்ந்த 25 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் தனது சொந்த செலவில் விலை உயர்ந்த குளிர் கண்ணாடிகளை வழங்கினார். தஞ்சாவூருக்கு கடந்த ஜூன் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் தமிழக முதல்வர் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்தார்.  கல்லணை திறப்பு, ரோடு ஷோ உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். முதல்வர் வருகையை ஒட்டி தஞ்சை மாநகர் முழுவதும் போக்குவரத்து சீரமைப்பு உட்பட பல்வேறு பணிகளில் போக்குவரத்து பிரிவு  காவலர்கள் சிறப்பாக பணியாற்றினர். இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இரா.இராஜாராம் தனது சொந்தச் செலவில் போக்குவரத்து பிரிவு காவலர்கள் 25 பேருக்கு விலை உயர்ந்த குளிர் கண்ணாடிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம், போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் எம்.ஜி.ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர். பின்னர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இரா.இராஜாராம்  கூறியதாவது: வெயில், மழை என்று கடுமையான சூழலிலும் இடைவிடாமல் பணியாற்றும் போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் எவ்விதத்திலும் மன அழுத்தம், மன உளைச்சலுக்கு உள்ளாகக் கூடாது. வெயில் மற்றும் தூசியில் இருந்து அவர்கள் கண்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக குளிர் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களிடம் கனிவாக பேச வேண்டும் என ஆலோசனைகள் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தஞ்சாவூரில் வழங்கப்பட்டது போல் அடுத்த கட்டமாக பட்டுக்கோட்டையிலும் போக்குவரத்து காவலர்களுக்கு குளிர் கண்ணாடிகள் வழங்கப்பட உள்ளது. மேலும் நிழற்குடை இல்லாத பகுதிகளில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களுக்கு நிழற்குடை அமைத்து தர ஏற்பாடு செய்யப்படும்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story