நாமரிபேட்டை அருகே வருகின்ற 25ந்தேதி பவளவிழா கொண்டாடும் தொப்பபட்டி ஜேடர்பாளையம் அரசுபள்ளி - குடும்ப விழாபோல் கொண்டாட முன்னாள் மாணவ மாணவியர் ஆயத்தம்..

நாமரிபேட்டை அருகே வருகின்ற 25ந்தேதி பவளவிழா கொண்டாடும் தொப்பபட்டி ஜேடர்பாளையம் அரசுபள்ளி - குடும்ப விழாபோல் கொண்டாட முன்னாள் மாணவ மாணவியர் ஆயத்தம்..
X
நாமரிபேட்டை அருகே வருகின்ற 25ந்தேதி பவளவிழா கொண்டாடும் தொப்பபட்டி ஜேடர்பாளையம் அரசுபள்ளி - குடும்ப விழாபோல் கொண்டாட முன்னாள் மாணவ மாணவியர் ஆயத்தம்..
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் தொ. ஜேடர்பாளையம் அரசு பள்ளி கடந்த, 1951 ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது, 75 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் பள்ளியின் பவள விழா கொண்டாட பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு ஏற்பாடு செய்து வருகிறது . விழா, வெள்ளிக்கிழமை நாளை, 9 மணிக்கு தொடங்குகிறது. சி.இ.ஓ., மகேஸ்வரி வரவேற்கிறார். கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகிக்கிறார். திருவள்ளுவர் சிலையை, 9ம் வகுப்பு மாணவி தியாகச்சுடர் திறந்து வைக்கிறார். விழாவில் ஓய்வு பெற்ற இப்பள்ளியின் ஆசிரியர்கள், தற்போதைய ஆசிரியர்கள், பள்ளியில் படித்து பெரிய பதவிகளில் வகித்த, வகிக்கின்ற முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது. இவ்விழாவிற்கு ஜேபி உடையார் குரூப் கம்பனியின் சேர்மன் ஜெயசீலன் தலைமை வகிக்கிறார். மாலை மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பர்வீன் சுல்தானாவின் சொற்பொழிவு உள்ளது. விழா குறித்து ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவருமான ஏ.கே.பி., மணி கூறியதாவது: பவளவிழா காணும் இப்பள்ளியில் இருந்து, 7 மாணவர்கள், எம்.பி.யாகவும், எம்.எல்.ஏாகவும் இருந்துள்ளனர். 5000க்கும் மேற்பட்டோர் அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர், பணியாற்றி வருகின்றனர். அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர். இப்பள்ளியின், 9 ம் வகுப்பு மாணவி தியாகச்சுடர், 1330 திருக்குறளையும் ஒப்புவித்தால் குறளரசி என்ற பட்டத்தை பெற்றுள்ளார். அவரை கவுரவிக்க பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பவளவிழா திருவள்ளுவர் சிலையை மாணவி திறந்து வைக்கவுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story