மதுராந்தகம் அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர் சந்திப்பில் பள்ளி சீருடையில் வந்த வாலிபர்

X
மதுராந்தகம் அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவர் சந்திப்பில் பள்ளி சீருடையில் வந்த வாலிபர் முன்னாள் மாணவர்களை அன்பால்'பிரம்பால் அடித்தும் காதை திருகிய ஆசிரியர் கூடியிருந்த முன்னாள் மாணவர்கள் ஆனந்த பூரிப்பு செங்கல்பட்டு மாவட்டம்,மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 2000 - 2003.ஆண்டில் படித்த பள்ளி மாணவர் மாணவிகள் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்கள் படித்த அதே பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர் இதில் தங்கள் படிக்கும் காலத்தில் தங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நினைவு பரிசுகளை வழங்கி முன்னாள் மாணவர்கள் கௌரவத்தினர். இந்த சந்திப்பில் முன்னாள் மாணவர்களின் ஒருவர் தாம் படிக்கின்ற பொழுது பள்ளிக்கு அணிந்து வரும் வெள்ளை சட்டை காக்கி பேண்ட் சீருடையை அணிந்து கொண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் வந்தவர் தங்களுடைய ஆசிரியர்களுக்கு வணக்கம் வைத்து மரியாதை செய்து தன் இருக்கையில் போய் அமர்ந்தார். இதைப் பார்த்த ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சந்தோஷத்தில் கோஷமிட்டனர். மேலும் இந்த சந்திப்பில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை பள்ளி பருவத்தில் படிக்க வில்லை என்றால் கண்டிப்பது போல இன்று நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களே கைநீட்ட சொல்லி பெரம்பால் அடித்து அன்பாக காதை திருகியும் சந்தோஷம் அடைந்தனர் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் தங்கள் படித்த பள்ளிக்கு வர்ண பூசுவது பள்ளிகளுக்கு வேண்டிய சுபகரண பொருட்கள் வழங்கினர்.
Next Story

