ஆட்டுச்சந்தையில் 2.5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை

ஆட்டுச்சந்தையில் 2.5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை
X
ஆடி 18 மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் திருவிழாக்களை முன்னிட்டு அய்யலூர் ஆட்டுச் சந்தையில் 2.5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமையன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற சந்தையாக அய்யலூர் ஆட்டுச்சந்தை திகழ்கிறது. இதனால் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, திருச்சி, கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் ஆடு மற்றும் கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிக அளவில் அய்யலூர் சந்தைக்கு வருகின்றனர். இந்த நிலையில் ஆடி 18 மற்றும் ஆடி மாதத்தில் கிராம பகுதிகளில் கோவில் திருவிழாக்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் சந்தையில் குவிந்தனர். இதனால் சந்தையில் கூட்டம் அலை மோதியது. வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளையும் வாங்கி வண்டிகளில் ஏற்றிச் சென்றனர். செம்மறி ஆடுகளை காட்டிலும் வெள்ளாடுகள் அதிக அளவில் விற்பனை ஆனது. 10 கிலோ எடையுள்ள வெள்ளாடு 8 ஆயிரத்தி 500 ரூபாய்க்கும் செம்மறி ஆடுகள் 6500  ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. (குறிப்பாக கோவிலுக்கு நேர்த்தி கடனாக வெட்டப்படும்  சுத்த கருப்பு நிற கிடாக்கள் ஏழு கிலோவில் இருந்து பத்து கிலோ எடை உள்ள கிடா  10 முதல் 12 ஆயிரம் வரை  விற்பனையானது) நாட்டுக்கோழி ரூபாய் 450 முதல் ரூபாய் 500 வரையிலும் கட்டுச் சேவல்கள் ரூபாய் 3 ஆயிரம் முதல் ரூபாய் 10 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.
Next Story