ராசிபுரத்தில் மாமன்னர் வல்வில் ஓரி முழு உருவ சிலைக்கு 25ம் ஆண்டாக சிறப்பு அபிஷேகம் பூஜை..

ராசிபுரத்தில் மாமன்னர் வல்வில் ஓரி முழு உருவ சிலைக்கு 25ம் ஆண்டாக சிறப்பு அபிஷேகம் பூஜை..
X
ராசிபுரத்தில் மாமன்னர் வல்வில் ஓரி முழு உருவ சிலைக்கு 25ம் ஆண்டாக சிறப்பு அபிஷேகம் பூஜை..
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு இராஜபுரம் என்கின்ற இராசிபுரத்தை ஆட்சி செய்த மழவர் பெருமகன் வன்னிய மாமன்னர் வல்வில் ஓரி வன்னியனார் அவர்களின் சதய விழாவை முன்னிட்டு 3.8.2025 ஞாயிற்றுக்கிழமை (ஆடி.18) அன்று இராசிபுரம் கைலாசநாதர் ஆலயத்தில் அமைந்திருக்க கூடிய மாமன்னர் வல்வில் ஓரி அவர்களின் முழு உருவ சிலைக்கு 25ம் ஆண்டாக சிவ ஸ்ரீ உமாபதி சிவாச்சாரியார் அவர்கள் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அலங்காரம் ஆராதனை செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பாட்டாளி மக்கள் கட்சி நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வல்வில் ஓரி மேம்பாட்டு குழு தலைவர் அரிமா ஆ.மோகன்ராஜ், தலைமை வகித்தார். நகர வன்னியர் சங்க செயலாளர் K.K.மாரிமுத்து, மாவட்ட பாட்டாளி சமூக ஊடகப் பேரவை செயலாளர் வ.யுவா இராமதாஸ், மற்றும் கட்டநாச்சம்பட்டி மாரியப்பன், கணேசன், டிங்கர் சீனி, இன்ஜினியர் பழனிவேல்,பள்ளி தலைவர் செந்தில், கல்லூரி பேராசிரியர் முனைவர் ஆர்.சிவக்குமார், போஸ்ட் வரதராஜ், அரிசி ஆலை முருகேசன், மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், விழா குழுவினர், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story