கும்பகோணத்தில் , சுமாா் 25 பேருக்கு மஞ்சள்காமாலை நோய் பாதிப்பு

கும்பகோணத்தில் , சுமாா் 25 பேருக்கு மஞ்சள்காமாலை நோய் பாதிப்பு
X
மஞ்சள் காமாலை
கும்பகோணம் கேஎம்எஸ் நகரில் குடிநீரில் கழிவு நீா் கலந்ததால், சுமாா் 25 பேருக்கு மஞ்சள்காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி 5-ஆவது வாா்டில் உள்ள கேஎம்எஸ் நகா் பெருமாண்டி மாதா கோயில் வடக்குத் தெரு குடிநீா் குழாய்களில் கழிவுநீா் கலந்து வந்ததாக தெரிகிறது. இதை இப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்தியதால் இருமல், காய்ச்சல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சென்ற அவா்களை பரிசோதனை செய்தபோது மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. பாதிக்கப்பட்டவா்களில் 6 போ் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சைக்கு சோ்ந்தனா். திங்கள்கிழமை 5 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். ஒருவா் மட்டும் சிகிச்சையில் உள்ளாா்.
Next Story