வயலில் களைக்கொல்லி அடித்ததால், 25 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் கருகி சேதம், விவசாயிகள் வேதனை,

கடந்த 19ம் தேதி மற்றும் இருபதாம் தேதிகளில் வயலில் ஃபுல் செடிகளுடன் மக்காச்சோள பயிர்களும் சேர்ந்து வாடி கருகி உள்ளது, இதுகுறித்து மருந்து விற்பனையாளரிடம் விவசாயிகள் சென்று கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
பெரம்பலூர் மாவட்டம் வி ஆர் எஸ் எஸ் புரம் பகுதியில் வயலில் களைக்கொல்லி அடித்ததால், 25 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் கருகி சேதம், விவசாயிகள் வேதனை, மருந்து விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள். பெரம்பலூர் மாவட்டம் , வேப்பந்தட்டை வட்டம் வி ஆர் எஸ் எஸ் புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், வேலுசாமி, சுப்புராஜ், சுந்தர்ராஜ், ராஜேந்திரன் , ராஜா, உள்ளிட்ட ஏழு விவசாயிகள் தங்கள் வயிலில் பயிர் செய்யப்பட்ட மக்காச்சோள வயலில் புள்கள் அதிகமாக இருந்ததால் அதை அழிப்பதற்கு பெரம்பலூர் மாவட்டம் நெற்குணம் கிராமத்தில்ஜி ஆர் அக்ரோ சென்டர் நடத்தி வரும் ரெங்கநாதன் என்பவரிடம் கடந்த வாரம் ஆறாம் தேதி களைக்கொல்லி மருந்து கேட்டுள்ளனர் (Weed Killer) என்ற களைக்கொல்லி மருந்தை பரிந்துரை செய்து விவசாயிகளுக்கு கொடுத்துள்ளார், இதில் ஏழு விவசாயிகளும் சேர்ந்து மொத்தம் 24 ஆயிரத்து 340 ரூபாய்க்கு மருந்துகள் வாங்கியுள்ளனர், இதனை தங்களது மக்காச்சோளம் வயல்களில் களைக்கொல்லி மருந்தை அடித்துள்ளனர், இந்நிலையில் கடந்த 19ம் தேதி மற்றும் இருபதாம் தேதிகளில் வயலில் ஃபுல் செடிகளுடன் மக்காச்சோள பயிர்களும் சேர்ந்து வாடி கருகி உள்ளது, இதுகுறித்து மருந்து விற்பனையாளரிடம் விவசாயிகள் சென்று கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த வேளாண்மை துறை அதிகாரிகள், மக்காச்சோளம் பாதிக்கப்பட்ட வயலுக்குச் சென்று பார்வையிட்டு அதன் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர், ஆய்வறிக்கை வந்த பின்னர் பூச்சி மருந்தின் தரம் குறித்து தெரிவிக்கப்படும் என தெரிவித்து சென்றனர் இந்நிலையில் . செய்வதறியாமல் தவித்த விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர் தங்கள் முழு உழைப்போம் வீணாகிய நிலையில், மருந்து நிறுவனங்களும் ஏதும் கண்டுகொள்ளாததால் விரக்தியில் இருந்த விவசாயிகள் தங்கள் வயல்களை மீண்டும் பயிர் செய்ததற்காக டிராக்டர் மூலம், கருகிய மக்காச்சோள பயிர்களை அழித்து உழவு செய்து வருகின்றனர். மேலும் ஒரு ஏக்கருக்கு ரூபாய் 25 ஆயிரம் வரை செலவு செய்திருப்பதாகவும், இதற்கு மருந்து நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வேதனை தெரிவித்துள்ளனர்.
Next Story