சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் 25-ம் ஆண்டாக இலவச பொது மருத்துவ முகாம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன் பெற்றனர்..

X
Rasipuram King 24x7 |28 Sept 2025 6:56 PM ISTசென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் 25-ம் ஆண்டாக இலவச பொது மருத்துவ முகாம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன் பெற்றனர்..
சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை சார்பில் 25-ம் ஆண்டாக இலவச பொது மருத்துவ முகாம் ராசிபுரத்தில் செப்.27, 28 ஆகிய இரு நாட்கள் ராசிபுரத்தில் உள்ள பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் மருத்துவமனை நிறுவனர் ராமசாமி உடையார் நினைவாக பல் துறை சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் ராசிபுரத்தில் உள்ள பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் இலவச பொது மருத்துவ முகாம் 2 நாட்கள் நடைபெற்றது. இம்முகாமை ராமச்சந்திரா மருத்துவமனையின் வேந்தர் வி.ஆர். வெங்கடாசலம் குத்து விளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். இதில் பொது மருத்துவம், நுரையீரல், குழந்தைகள் மருத்துவம், இருதய பரிசோதனை, நரம்பியல், சிறுநீரகம், தோல், காது, மூக்கு, தொண்டை, கண், பல் உள்ளிட்டபல்வேறு நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் பெண்க ளுக்கான மார்பக புற்று நோய் கண்டறியும் நவீன பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. இசிசி, ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே, எக்கோ பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட், புற்று நோய் பரிசோதனை மற்றும் நுரையீரல் பரிசோதனை செய்யப்பட்டது. சிறப்பு பரிசோதனைகள் அவசியத்தின் பெயரில் பொதுமக்களுக்கு இலவசமாக செய்யப்படும் ஆண்டிபயாட்டிக் மாத்திரைகள் 10 நாட்களுக்கும், நோய் வைட்டமின் மாத்திரைகள் 30 நாட்களுக்கும் இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஆயிரம் பற்பசை மற்றும் பற்குச்சி உள்ளீட்டவைகளும் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் 30க்கும் மேற்பட்டவர்களுக்குவிலை உயர்ந்த தரமானதாக (செவித்திறன் கருவி) காது கேட்கும் கருவி பள்ளி குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை முறையான பரி சோதனைக்கு பிறகு பயனாளிகளுக்கு இந்த கருவியை இலவசமாக வழங்கப்பட்டது. ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள பல் செட் கருவிகளும் 50.பேருக்கு இலவசமாக வழங்கப்பட்டது. பயனாளிகள் அனைவரும் மருத்துவர்களுக்கும் நிறுவன வேந்தருக்கும் தங்களின் நன்றிகளை தெரிவித்தனர். (2) இரண்டு நாட்கள் நடந்த இலவச மருத்துவ முகாமில் நாமக்கல் மாவட்டம் மற்றும் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 3000.க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றுச் சென்றனர். இந்த முகாமில் மருத்துவக்கல்லூரி துணை வேந்தர் உமாசேகர், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கே.பாலாஜிசிங், பதிவாளர் எஸ்.செந்தில்குமார், மருத்துவக் கண்காணிப்பாளர் பி.சுரேந்திரன், கூடுதல் மருத்துவக் கண்காணிப்பாளர் மோகன்செளத்ரி, பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் எச்.தமிழ்செல்வன், சிறப்பு மருத்துவர்கள் எஸ்.மணிகண்டன், டாக்டர் எஸ்.ஆர்.ராமகிருஷ்ணன், எஸ்.ரமேஷ், சமரபரி, எஸ்.பிரசன்னகுமார், கே.எஸ்.ஸ்ரீதரன், பிரீத் அகர்வால், எஸ்.சுந்தர், அருண்சுந்தர், ரித்விக் ரமேஷ், பார்கவரெட்டி, மற்றும். செவித்திறன் மற்றும் பேச்சு பயிற்சி நிபுணர்கள் பிரகாஷ் மதன்குமார், மனோஜ், சித்திக், சிவமணி, மேலும் தொழிலதிபர் தனபால் உடையார், முன்னாள் எம்எல்ஏ கேபி ராமசாமி, முத்தாயம்மாள் முத்துவேல் ராமசாமி, வாட்டர் விஜய், முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் பி.சி.செங்குட்டுவன், கே.விஜயராகவன், ஜெ.முரளி, வாசுதேவன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story
