,கே,.கே. முனிராஜா ஆக்குபேஷனல் தெரபி கல்லூரியின் 25ம் ஆண்டு வெள்ளிவிழா மினி மாரத்தான் போட்டி

X
Komarapalayam King 24x7 |30 Sept 2025 8:35 PM ISTகுமாரபாளையத்தில் உடல்ஆரோக்கியத்தை வலியுறுத்தியும் இதய தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
குமாரபாளையம் அருகே ஜே,கே,.கே. முனிராஜா ஆக்குபேஷனல் தெரபி கல்லூரியின் 25ம் ஆண்டு வெள்ளிவிழாவையொட்டியும், உலகக் இதய தினத்தையொட்டியும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் குறித்தும் மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதில் 462 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மினி மாரத்தான் போட்டியினை கல்லூரி தாளாளர் ஜெயபிரகாஷ், இன்ஸ்பெக்டர் தவமணி தொடங்கி வைத்தனர். மாரத்தான் போட்டி எடப்பாடி சாலையில் உள்ள ஆனந்தாஸ்ரமம் மைதானத்திலிருந்து தொடங்கி, எடப்பாடி ரோடு, சந்தைப்பேட்டை, பேருந்து நிலையம், மற்றும் சேலம் முக்கியச் சாலை, குளத்துகாடு, கத்தேரி தேசிய நெடுஞ்சாலை, வழியாக கல்லூரி மைதானத்தில் முடிவடைந்தது. சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தை 25 நிமிடங்களில் கடந்தனர். இதில் அஜித்குமார், சூரியபிரகாஷ், ஹசில் ஆகிய மாணவர்கள் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசு பெற்றனர். அனைத்து மாணவர், மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. வழி நெடுகிலும் மாணவ- மாணவிகள் இதயத்தை பாதுகாத்தல் குறித்தும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் குறித்தும் துண்டு பிரசுரங்கள் வழங்கியபடி பங்கேற்றனர். முதல்வர் ஜெகதீஷ் உள்பட பேராசிரியர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.
Next Story
