அரசு தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள்: பிரதமர் மோடிக்கு இபிஎஸ் வாழ்த்து

X
பிரதமர் மோடி குஜராத் மாநில முதல்வராகவும், பின்னர் பிரதமராகவும் தொடர்ந்து 25 ஆண்டுகள் அரசின் தலைமைப் பதவியில் இருந்து வருகிறார். இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “25 ஆண்டுகளாக அரசின் தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வரலாற்றுச் சாதனை படைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த இணையற்ற மைல்கல், உங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அரசியல் சாதுர்யம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், தேசத்திற்கு நேர்மையுடன் சேவை செய்வதற்கும் உள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
Next Story

