கர்நாடகா-கேரளா வழியாக 25 டன் ரேஷன் அரிசி கடத்தல்: கோவையில் லாரி ஓட்டுநர் கைது !

கர்நாடகா-கேரளா வழியாக 25 டன் ரேஷன் அரிசி கடத்தல்: கோவையில் லாரி ஓட்டுநர் கைது !
X
குடிமை பொருள் குற்றப் புலனாய்வு துறை காவல்துறையினர் கோவை மாவட்டம் மதுக்கரை பைபாஸ் டோல்கேட்டில் வாகன சோதனை நடத்தினர். சோதனையில் கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 25 டன் ரேஷன் அரிசி கொண்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டது. லாரி ஓட்டுநராக வந்தவர் தர்மபுரி மாவட்டம் ஆட்டுக்காரன்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் என தெரியவந்தது. கடத்தல் அரிசியின் மதிப்பு சுமார் 8 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது. லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story