கோவை: செட்டிபாளையத்தில் 25 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்த ஆந்திர பிரதேசத்தார் இருவர் கைது – குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை

25 கிலோ கஞ்சாவுடன் இருவர் செட்டிபாளையத்தில் கைது – குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை.
கோவை மாவட்டம், செட்டிபாளையம் காவல் துறையினர் 25 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்த ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த கன்ட்ல் ராம லட்சுமன் (20) மற்றும் மண்டல வீரபாபு (21) ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் குற்றவாளிகளுக்கு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். காவல் கண்காணிப்பாளர் பொது அமைதி மற்றும் சுகாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story