லேத் போட்டார் உரிமையாளர் வீட்டில் நகை 25 பவுன் திருட்டு

Komarapalayam King 24x7 |28 Nov 2025 8:22 PM ISTகுமாரபாளையத்தில் லேத் பட்டறை உரிமையாளர் வீட்டில் நகை 25 பவுன் திருடப்பட்டது.
குமாரபாளையம் பூலக்காடு பகுதியில் வசிப்பவர் நாகராஜ், 41. லேத் பட்டறை தொழில். இவர் குடும்பத்துடன் சேலம் சென்று விட்டு நேற்று காலை 08:00 மணியளவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோக்கள் உடைக்கப்பட்டு, 25 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.
Next Story
