இருஞ்சிறை கண்மாய் 25 ஆண்டுகளுக்குப் பின் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியை தொடங்கி வைத்து மாநில நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்

இருஞ்சிறை கண்மாய் 25 ஆண்டுகளுக்குப் பின் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியை தொடங்கி வைத்து மாநில நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்
X
இருஞ்சிறை கண்மாய் 25 ஆண்டுகளுக்குப் பின் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியை தொடங்கி வைத்து மாநில நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு*
நீர்நிலைகளை பாதுகாத்து வருங்கால சமுதாயத்திடம் ஒப்படைக்க வேண்டியது நமது கடமை-திருவிளையாடல் புராணத்தில் இடம்பெற்ற இருஞ்சிறை கண்மாய் 25 ஆண்டுகளுக்குப் பின் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியை தொடங்கி வைத்து மாநில நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே மாவட்டத்தின் மிகப்பெரிய கண்மாய்களுள் ஒன்றான இருஞ்சிறை கண்மாய் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு நிதியின் கீழ் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் மாநில நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பூமிபூஜை போட்டு தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,கிருதுமால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அத்திகுளம் அணைக்கட்டின் இடது பிரதான கால்வாயின் மூலம் பாசனம் நீர் இருஞ்சிறை கண்மாய்க்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும் இருஞ்சிறை கண்மாய் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதன் மூலமாக சுமார் 510 ஹெக்டேர் பாசன விளைநிலங்கள் பயன்பெறும் என்றும் மேலும் கண்மாயில் 138.00 மில்லியன் கன அடி நீர் தேக்கம் செய்யப்பட்டு சுற்றியுள்ள கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரவும்,கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனைகளை தீர்வதுடன் கிராம மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.நீர்நிலைகளை பாதுகாத்து வருங்கால சமுதாயத்திடம் ஒப்படைக்க வேண்டியது நமது கடமை என்றும் 25 ஆண்டுகள் கழித்து இக்கண்மாய் தூர்வாரப்படுவதாகவும், இருஞ்சிறை மற்றும் அருகில் உள்ள கட்டனூர் ஆகிய கிராமங்கள் திருவிளையாடல் புராணத்தில் பாடப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க புகழ்பெற்ற இடங்களாகும் என்றும் இதற்கு எடுத்துக்காட்டாக 100 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ்தாத்தா உ.வே சாமிநாத ஐயர் தமது நூலில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி பெருமிதம் அடைந்தார்.
Next Story