டிரினிடி கல்லூரியில் வெகு சிறப்பாக நடைபெற்ற 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா!!

X
நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25-வது ஆண்டு வெள்ளி விழா துவக்க நாள் நிகழ்ச்சி இன்று டிரினிடி கலையரங்கில் நடைபெற்றது.
நிகழ்விற்கு கல்லூரி தலைவர் கே. நல்லுசாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் பி. சிந்தியா செல்வி, சென்னை வருமான வரி துணை ஆணையர் கவிதா ராமானுஜன், நாமக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ். ராஜேஸ் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் தன் உரையில் குறிப்பிடும்போது மகளிர் உயர்கல்வி கற்பதால் மட்டுமல்லாது இந்த சமுதாயமும் உயர்கிறது என்றார். வருமான வரி ஆணையர் கவிதா தன் உரையில் குறிப்பிடுகையில் பெரு நகரங்களை சேர்ந்தவர்களை விட கிராமப்புற மாணவர்களே அதிகம் சாதிக்கின்றனர் என்றார். நாமக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் தன் உரையில தமிழக காவல்துறை மகளிர்க்கு பல வழிகளில் உதவி செய்து வருகிறது என்றும், மகளிர் பாதுகாப்பு செயலியை அனைவரும் தங்கள் அலைபேசியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றார். பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர். ஜெகநாதன் கல்லூரி வெள்ளி விழா மலரை வெளியிட்டு பேசினார். அவர் நடைப்பயிற்சி , மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். நிகழ்வில் டிரினிடி கல்வி குழும இயக்குநர்கள் ஆர். குழந்தைவேல், பிஆர்எஸ். பழனிசாமி, டி. சந்திரசேகரன், பி. தயாளன், ராம. சினிவாசன், எஸ். செல்வராஜ், அருணா செல்வராஜ், ஆத்தூர் - பாரதியார் கல்வி குழும செயலர் ஏ.கே.ராமசாமி, அதன் பொருளாளர் குழந்தைவேல், நாமக்கல்- தொழில் அதிபர் மருத்துவர் செழியன், சேலம் - ஏவி எஸ் கல்லூரி செயலர் கே.ராஜ விநாயகம், சேலம் - பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் கே. சத்தியமூர்த்தி, பெரியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் டி. பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி முதல்வர் எம். ஆர். லட்சுமி நாராயணன் அனைவரையும் வரவேற்றார். வெள்ளி விழா நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அரசுபரமேசுவரன், நிர்வாக அலுவலர் என். எஸ். செந்தில்குமார், இயற்பியல் துறைத் தலைவர் பி. லட்சுமி , இளநிலை தமிழ்த்துறைத் தலைவர் ஆர். சாவித்திரி ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரி பேராசிரியைகள் மற்றும் மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Next Story