குற்றச் சம்பவங்களை கண்காணிக்க 250 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் ச.ராஜேஷ்கண்ணன் எஸ்.பி திறந்து வைத்தார்

குற்றச் சம்பவங்களை கண்காணிக்க 250 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள்  ச.ராஜேஷ்கண்ணன் எஸ்.பி திறந்து வைத்தார்

கண்காணிப்பு கேமராக்கள்

நாமக்கல் நகரில், குற்ற தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க, 250 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ்கண்ணன் திறந்து வைத்தார்.

நாமக்கல் நகரில், குற்றத் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கையை கண்காணிப்பதற்காக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், முக்கிய சாலைகள், சந்திப்புகள் என, பல்வேறு இடங்களில், போலீஸ் துறை சார்பில் 250 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை, ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில், நாமக்கல் போலீஸ் ஸ்டேசனில், அதிநவீன கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு அறை மற்றும் புலனாய்வு புதிய கட்டிட அறையை, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஸ்கண்ணன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

நாமக்கல் நகரத்தில், 250 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டதன் மூலம், குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களையும், சட்ட விதிமுறைகளை மீறி வாகனங்களில் செல்பவர்களையும் எளிதில் அடையாளம் கண்டு நடவடிக்கைகள் எடுக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் கூடுதல் எஸ்.பி. ராஜூ, டி.எஸ்.பி. தனராசு, இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், சத்தியமூர்த்தி அண்ட் கோ நிர்வாக இயக்குனர் அரவிந்தன், பிஎஸ்டி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிர்வாக இயக்குனர் தென்னரசு, தங்கம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் குழந்தைவேல் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags

Next Story