திருச்செங்கோடு நீதிமன்றங்களில் 250க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு

திருச்செங்கோடு நீதிமன்றங்களில் 250க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு
தமிழகத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் திருச்செங்கோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லிப்ட் வசதியை விரைந்து முடிக்க வலியுறுத்தியும் மற்றும் கோர்ட் வளாகத்தில் கிளை அஞ்சலகம் உடனடியாக அமைத்து கொடுக்க வலியுறுத்தியும் இன்று ஒரு நாள் மட்டும் திருச்செங்கோடு சங்ககிரி சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் 250க்கும் மேற்பட்டோர் அனைத்து நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருப்பது என்று திருச்செங்கோடு வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக இன்று ஒரு நாள் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.தொடர்ந்து நாளை முதல் JAAC ன் திருவண்ணாமலை பொதுக் கூட்டத்தில் அறிவித்தபடி தொடர் அறப்போராட்டமாக நாளை முதல் 28.08.2024 ஆம் தேதி அன்று மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்தி வைத்து திரும்ப பெற வேண்டும் என்று கோரி தமிழ்நாடு மாநில அளவில் அனைத்து நீதிமன்றங்கள் வாயில் முன்பாக அனைவரையும் ஒருங்கிணைத்து மனித சங்கிலி போராட்டம் செய்ய இருப்பதாகவும், நாளை மட்டும் நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருப்பது என்றும் ஜாக் கூட்டு குழு பொதுக்குழுவில் அறிவித்தபடி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பாக நாளை வழக்கறிஞர்கள் தமிழகம் முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய உள்ளனர்.....
Next Story