பாகனத்தம் அருகே பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது. ரூபாய் 250 பறிமுதல்.

பாகனத்தம் அருகே பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது. ரூபாய் 250 பறிமுதல்.
பாகனத்தம் அருகே பணம் வைத்து சூதாடிய நான்கு பேர் கைது. ரூபாய் 250 பறிமுதல். கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பாகனத்தம் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக பெண் காவல் உதவி ஆய்வாளர் சசிகலாவுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் செப்டம்பர் 1-ம் தேதி மாலை 5 மணி அளவில், பாகனத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு முள்தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகனத்தம் பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, ஜெயராமன், ரவி, சரவணன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும், ரூ.250 பறிமுதல் செய்தனர். பின்னர் நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், பின்னர் அவர்களை காவல் நிலையப் பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story