ராமநாதபுரம் 250 கிலோ கஞ்சா பறிமுதல் ஒருவர் தப்பி ஓட்டம்

பட்டினம் காத்தான் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் கடத்திவரப்பட்ட 250 கிலோ கஞ்சா பறிமுதல்: போதை பொருள் தடுப்பு பிரிவு நடவடிக்கை
ராமநாதபுரம் இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக ராமேஸ்வரத்திற்கு காரில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலை ராமநாதபுரம் அடுத்த ராம் நகர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த தெலுங்கான மாநில காரை போதைப்பொருள் ழ தடுப்பு பிரிவினர் நிறுத்தியபோது காரில் இருந்தவர்கள் காரை விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து காரை சோதனை செய்தபோது காரில் 250 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்ததையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தப்பி ஓடிவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை மதுரையில் உள்ள போதை தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு எடுத்துச்சென்று இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 15 லட்ச ரூபாய் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Next Story