லாரியில் 250 லிட்டர் டீசல் திருட்டு

X

நத்தம் அருகே நின்று கொண்டிருந்த லாரியில் 250 லிட்டர் டீசல் திருட்டு
தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த தர்மர் என்பவர் நத்தம் பகுதியில் தேங்காய் லோடு ஏற்றுவதற்காக நத்தம் அம்மன் குளம் அருகே நேற்று இரவு லாரியை நிறுத்தி இருந்தார். அப்போது நின்று கொண்டிருந்த லாரியில் இருந்து 250 லிட்டர் டீசலை மர்ம நபர்கள் திருடிவிட்டனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லாரிகளில் 550 லிட்டர் டீசல் திருடு போயிருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story