ராஜபாளையத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

X
ராஜபாளையத்தில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கோயில் மண்டபத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. தனியார் அறக்கட்டளை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த பரிசோதனை முகாமில் ஐ என் டி யு சி நகர், அண்ணாநகர், ஆசிரியர் குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் கண்புரை பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, கண்ணீர் அழுத்த நோய் பரிசோதனை, குழந்தைகளுக்கான கண் பார்வை குறைபாடுகள், கிட்ட பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து குறைபாடுகள் உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது. கண்ணாடி தேவைப்படும் நபர்களுக்கு குறைந்த விலையில் கண்ணாடி வழங்கப்பட்டது.
Next Story

