பூக்களின் விலை கடும் உயர்வு மல்லிகை கிலோ ரூ.2500க்கு விற்பனை

X
திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு சின்னாளபட்டி, செம்பட்டி, கன்னிவாடி, தாடிக்கொம்பு, வெள்ளோடு உள்ளிட்ட தாடிக்கொம்பு, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மல்லிகை, கோழிக் கொண்டை, முல்லை, சம்மங்கி உள்ளிட்ட பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பூக்கள் வரத்தைப் பொறுத்து நாள்தோறும் விலைகள் நிர்ணயிக்கப்படுவது வழக்கம். திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பனிப்பொழிவு நீடித்து வருகிறது. மார்கழி மாதம் முடிந்த நிலையிலும் பனிபொழிவு இருந்து வருகிறது. இதனால் செடியிலேயே பூக்கள் கருகி வருகிறது. இதன் காரணமாக வரத்து பாதியாக குறைந்துள்ளது. இந்நிலையில் பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டிற்கு இன்று 30 டன் பூக்கள் மட்டுமே வந்தது. இதில் மல்லிகை 100 கிலோ, முல்லை 1 டன் அளவிற்கு மட்டுமே வந்துள்ளது. இதனால் மல்லிகை பூகிலோ ரூ.2500க்கு விற்கப்பட்டது. இதேபோல் முல்லை பூ ரூ.1500, ஜாதிப் பூ ரூ.1300, கனகாம்பரம் ரூ.1000, காக்கரட்டான் ரூ.700, பட்டன் ரோஸ் ரூ.180, சம்பங்கி ரூ.100, அரளி ரூ.200., கோழி கொண்டை ரூ.50, செண்டு மல்லி ரூ.45 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
Next Story

