சரக்கு ரயிலில் ஏற்றுவதற்கு வேகன்கள் ஒதுக்காததால் 2500 டன் புழுங்கல் அரிசி மூட்டைகளுடன் 3 நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் லாரி ஓட்டுநர்கள்.... 

சரக்கு ரயிலில் ஏற்றுவதற்கு வேகன்கள் ஒதுக்காததால் 2500 டன் புழுங்கல் அரிசி மூட்டைகளுடன் 3 நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் லாரி ஓட்டுநர்கள்.... 
X
ஓட்டுநர்கள் கோரிக்கை
தஞ்சாவூர் சேமிப்புக் கிடங்குகளில் இருந்து புழுங்கல் அரிசி மூட்டைகள் பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரயிலில் வேகன்களில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்படும். அங்கு அந்தந்த மாவட்டங்களில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் இந்த அரிசி வினியோகம் செய்யப்படும்.  இதற்காக ஏராளமான லாரிகளில் குடோனிலிருந்து அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்படும். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தஞ்சையில் இருந்து தூத்துக்குடிக்கு சரக்கு ரயிலில் 2500 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் அனுப்புவதற்காக குடோன்களில் இருந்து ஏராளமான லாரிகளில் ஏற்றி வரப்பட்டது.  ஆனால் சரக்கு ரயிலில் போதிய வேகன்களை ரயில்வே நிர்வாகம் ஒதுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மூன்று நாட்களாக குட்ஷெட் பகுதியில் ஏராளமான லாரிகளில் அரிசி மூட்டைகளுடன் ஓட்டுநர்கள் காத்துக் கொண்டுள்ளனர்.  இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனைப்படுகின்றனர். எனவே, உடனடியாக சரக்கு ரயிலில் தேவையான வேகன்களை ஒதுக்கி லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை சரக்கு ரயிலில் ஏற்ற வேண்டும் என ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story