திமுக பொதுக்கூட்டம் - 25,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

X
திண்டுக்கல் தோமையார்புரத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் சார்பில் ஒரே நாளில் ஏற்பாடு செய்யப்பட்ட ஓரணியில் தமிழ்நாடு - தீர்மான ஏற்பு கூட்டம் நடைபெற்றது. இதில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, திமுக முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதில், 25,000க்கு மேற்பட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசகையில்:- தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியாவிற்கு வழிகாட்டுகின்ற தலைவராக மாற்ற மாநிலங்களின் உரிமைகளை பெற்றுத் தருகின்ற வழிகாட்டியாக ஓரணியில் தமிழ்நாடு என்ற சீரியல் முயற்சி எடுத்து அதில் வெற்றி கண்டுள்ளார். ஓரணியில் தமிழ்நாடு என்பதை உலகமே திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. 2026 தேர்தல் வெற்றிக்கு முன்னால் ஓரணியில் தமிழ்நாடு என்பது ஜாதியை கடந்து, மதத்தை கடந்து, மொழியை கடந்து, கட்சியை கடந்து, எல்லோரும் ஓரணியில் வருகிறோம் என எந்த கிராமத்திற்கு சென்றாலும் தானாகவே மக்கள் முன்வந்து பதிவு செய்து ஓரணியில் தமிழ்நாடு என்ற முயற்சியை பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இது வருகின்ற தேர்தலில் எதிரொலிக்க உள்ளது. மத்தியில் இருக்கக் கூடிய அரசு இந்தியாவில் இருக்கக்கூடிய மாநில அரசுகளை, மாநில கட்சிகளை எல்லாம் பிரிவினைவாதத்தை தூண்டி, பிரித்தாலும் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விடலாம் என நினைக்கிறது. அது கனவு தான் ஒருபோதும் நடக்காது நடக்காது. கட்சித் தலைவராக மு க ஸ்டாலின் பதிவி ஏற்றதற்கு பின்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல், நகராட்சி தேர்தல், மாநகராட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என எல்லா தேர்தலிலும் வெற்றி பெற்ற ஒரே முதல்வர் ஸ்டாலின் தான். தமிழனுக்கு மானம் உள்ளது. தாய் மொழியாம் தமிழை காப்பதற்காக நமது மொழி ஆதிக்க மொழியாக வர வேண்டும், ஆட்சி மொழியாக வரவேண்டும், மத்தியில் இருந்த அரசு ஹிந்தி மொழியை திணித்தது இந்தியாவிலேயே இந்தியை எதிர்த்து போராடிய ஒரே மாநிலம் தமிழகம் தான். மொழிக்காக உயிரைக் கொடுத்தது மட்டுமல்லாமல் சிறைக்குச் சென்ற இயக்கம் திராவிட இயக்கம் தியாக இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் வரலாற்றிலே திராவிட முன்னேற்றக் கழகத்தை தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. கலைஞர் ஆட்சியின் போது 172 இடத்தில் வெற்றி பெற்றோம் இப்பொழுது பெறப் போகின்ற வெற்றி 200 க்கு மேல் வெற்றி பெறுவோம். திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டன் எதையும் எதிர்பார்க்க மாட்டான் சாப்பாட்டை எதிர்பார்க்க மாட்டான் பணத்தை எதிர்பார்க்க மாட்டான் சுயமரியாதையை தான் எதிர்பார்ப்பான் அவனுக்கு மரியாதை என்பது தான் முக்கியம் திராவிட முன்னேற்றக் கழகத்தை தவிர வேறு எந்த இயக்கத்திலும் இதை பார்க்க முடியாது. எழுச்சி என்ற வார்த்தை உருவானதற்கு காரணம் திராவிட முன்னேற்றக் கழகத்தை பார்த்து தான் அப்படிப்பட்ட ஒரு இயக்கம் மக்கள் மத்தியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு திமுக மீது வழக்குகள் போட்டு அடக்கி விடலாம் ஒதுக்கி விடலாம் என நினைத்தால் எந்த இயக்கமும் தேர்தலுக்காலத்தில் நிற்க முடியாத நிலை ஏற்படும் ஒரே ஒரு இயக்கம் மட்டும் தான் தலை நிமிர்ந்து நிற்கும் அந்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் தான். ஸ்டாலின் முதல்வராக வருவதை யாராலும் தடுக்க முடியாது. "மயிர் நீப்பின் கவரிமான் உயிர் வாழாது" என்ற பழமொழிக்கு ஏற்ப மானத்தை ஒரு தமிழன் விட்டுக் கொடுத்து உயிர் வாழ மாட்டான். அப்படிப்பட்ட மண் தமிழ் மண் இந்த மண்ணிற்கு வீரம் இருக்கிறது. மொழி எந்த காலத்திலும் இனிமேல் தலை வைத்து திரும்பி பார்க்க முடியாது. எங்க வேண்டுமானாலும் மொழியை திணிக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் அது நடக்காது. மத்திய அரசு எல்லா துறைகளிலும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். தமிழகம் முன்னோடி மாநிலமாக இருப்பதால் அதற்கு அதிக நிதி கொடுக்க வேண்டியது இல்ல எனக்கு கூறுகிறார்கள். பிரிவினை வாதத்தை தூண்டி உரிமையை பறிக்க நினைக்கிறார்கள். தற்பொழுது அனைத்து மாநிலங்களும் நிமிர்ந்து விட்டனர் தமிழ்நாட்டு முதல்வர் இருக்கிறார். இந்தியாவில் இருக்கின்ற அத்தனை மாநிலமும் முதல்வர் ஸ்டாலின் கை நீட்டினால் இந்தியாவே அணிவகுத்து நிற்க தயாராக உள்ளது. காரணம் மாநிலத்தின் உரிமையை கேட்க தயங்குகிறது கேட்கக் கூடிய ஒரே முதல்வர் தமிழர் முதல் ஸ்டாலின் தான் ஆட்சி இருந்தாலும் இல்லை என்றாலும் எனது உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டேன் தமிழ்நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்கக் கூடாது தமிழ்நாட்டில் இந்தி ஆட்சி மொழியாக வரக்கூடாது செம்மொழியாம் தமிழ் மொழி தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கக் கூடிய கொள்கையிலே கோட்பாட்டிலே லட்சியத்திலே உறுதியாக இருக்க கூடியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் நாமும் இருக்க வேண்டும். 2026 இல் வரக்கூடிய வெற்றி 2029ல் பாராளுமன்றத்தில் பெறக்கூடிய வெற்றி மூலம் இந்தியாவே நமது தலைவரின் கைவசம் வரக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை. உலகமே ஸ்டாலினை திரும்பிப் பார்க்கின்றது. இப்படி ஒரு முதல்வர் இந்தியாவில் இருக்கிறாரா என பேசினார். உணர்ச்சிவசமாக பேசி கண் கலங்கிய அமைச்சர் ஐ பெரியசாமி அவரைப் பார்த்து அவரது மகன் செந்தில்குமார் எம்எல்ஏவும் கண்கலங்கினார் எனது கடைசி மூச்சு இருக்கும் வரை தொண்டர்களுக்காக இருப்பேன் என கூறி மேடையில் கண் கலங்கிய அமைச்சர் ஐ. பெரியசாமி அவரைத் தொடர்ந்து பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் மேடையில் வைத்த கண் கலங்கினார்.
Next Story

