அரவக்குறிச்சி - மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி முதல் பரிசு ரூ. 2,50,000-
அரவக்குறிச்சி - மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி முதல் பரிசு ரூ.2,50,000- அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,2025 - 26 ஆம் ஆண்டில் அரவக்குறிச்சி வட்டாரத்தில் சிறுதானியங்கள் மற்றும் பயிர் வகை பயிர்களில் மாநில அளவில் அதிக உற்பத்தி அடையும் விவசாயிகளுக்கு ரொக்க பரிசு வழங்கும் திட்டம் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்ட மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. போட்டியில் நில உரிமையாளர்கள் குத்தகைதாரர்கள் பங்கு பெற தகுதி உடையவர்கள். நுழைவு கட்டணமாக 150 செலுத்தவேண்டும். பயிர் விளைச்சல் போட்டிக்கான கடைசி அறுவடை தேதி 2026 மார்ச் 15,குறைந்தது 5 ஏக்கரில் கரும்பு அல்லது பச்சை பயிறு சாகுபடி செய்ய வேண்டும்.50 சென்ட் பரப்பளவில் உள்ள பயிர் போட்டிக்காக அறுவடை செய்ய வேண்டும்.மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.
Next Story




