மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், 25.07.2024 அன்று திருச்சுழி, விருதுநகர், வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர் வட்டாரங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர
Virudhunagar King 24x7 |23 July 2024 2:55 PM GMT
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், 25.07.2024 அன்று திருச்சுழி, விருதுநகர், வெம்பக்கோட்டை, திருவில்லிபுத்தூர் வட்டாரங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ”கள ஆய்வில் முதலமைச்சர் “ என்ற முன்னெடுப்பின் கீழ், பொதுமக்களிடம் பெறப்படும் கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்வு காண அறிவுறுத்தி வருகிறார்கள். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் மேற்படி முன்னெடுப்பின் நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் நிருவாகத்தில் மற்றுமொரு மைல் கல்லாக ”மக்களுடன் முதல்வர்” திட்டம் முதல்வரின் முகவரித்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளில் ”மக்களுடன் முதல்வர்” முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இதற்காக, 15 அரசுத்துறைகள் சார்ந்த 44 சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது 440 கிராம ஊராட்சிகளில் 65 முகாம்கள் 11.07.2024 முதல் 14.08.2024 வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது, 25.07.2024 அன்று, திருச்சுழி, விருதுநகர், திருவில்லிபுத்துார் மற்றும் வெம்பக்கோட்டை வட்டாரங்களில் கீழ்க்கண்ட ஊராட்சிகளில் நடைபெற உள்ளது. திருச்சுழி வட்டாரத்தில், கல்லுாரணி / நாடார் திருமண மண்டபத்தில், கல்லுாரணி, ஆலடிப்பட்டி, கீழகண்டமங்கலம், குலசேகரநல்லுார், தமிழ்பாடி, திருச்சுழி, குல்லம்பட்டி, சவ்வாசுப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கும், விருதுநகர் வட்டாரத்தில், ரோசல்பட்டி / அய்யனார் வதனா திருமண மண்டபத்தில், பெரிய பேராலி, சிவஞானபுரம், பாவாலி, சத்திரெட்டியபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கும், வெம்பக்கோட்டை வட்டாரத்தில், தாயில்பட்டி/கம்மவர் திருமண மண்டபத்தில் தாயில்பட்டி, பேர்நாயக்கன்பட்டி,வெற்றிலையூரணி, மேலஓட்டம்பட்டி, சுப்ரமணியபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கும், திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் டி.மானகசேரி, மல்லிபுதூர், முள்ளிக்குளம், மல்லி, இனாம் நாச்சியார் கோவில் ஆகிய ஊராட்சிகளுக்கும் மக்களுடன் முதல்வர் முகாம் 25.07.2024 அன்று நடைபெற உள்ளது. மேலும், இணைய வழி விண்ணப்ப முறை (Department Online Portal) எனில் சம்பந்தப்பட்ட துறைகள் முகாமிலேயே விண்ணப்பத்தினை இணைய வழியில் பதிவேற்றம் செய்திட . அனைத்து முகாம்களிலும் இ சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும். அங்கு மேற்கொள்ளப்படும் சேவைகளுக்கு 50 சதவீத கட்டணம் மட்டுமே பெறப்படும். மேலும், இதுகுறித்த விபரம் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஐ பிரிவு, தொலைபேசி எண் 04562-252742, விருதுநகரில் தொடர்பு கொண்டு பயனடையுமாறும், விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Next Story