வேனில் கடத்திய 2520 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

வேனில் கடத்திய 2520 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
மதுரையில் வேனில் கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிகுமார், பறக்கும்படை தாசில்தார் பழனிகுமார் ஆகியோர் மாகாளிபட்டி ரோடு நாகுபிள்ளை தெருவில் இன்று ( டிச.26)ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்த போது 45 கிலோ எடை கொண்ட 56 சாக்கு மூடைகளில் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. சோதனையில் கைபற்றப்பட்ட 2,520 கிலோ ரேசன் அரிசியை வி.கே.புரம் கிட்டங்கில் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வேன் மற்றும் அதில் வந்த மணிகண்டன் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
Next Story