சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் 253 வது நினைவு தினம்
Tiruchengode King 24x7 |20 Aug 2024 11:41 AM GMT
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் 253 வது நினைவு தினம்
சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டி வீரனின் 253 வது நினைவு தினத்தை முன்னிட்டு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலை அருகே அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த ஒண்டிவீரனின் உருவ படத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் முன்னிலையில் பட்டியல் அணி தலைவர் கே ராஜேந்திரன் மற்றும் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் ஆகியோரின் தலைமையில் ஒண்டிவீரனின் திருவுருவப்படத்திற்கு பாஜக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதே போல் குமரமங்கலத்தில் மாவட்டத் துணைத் தலைவர் திரு ஈஸ்வரன் அவர்களின் தலைமையிலும் 253ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கம்செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது அங்கே பாஜகவினர் ஒண்டிவீரனின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் ஒண்டிவீரனின் 253 வது நினைவு தினத்தில் வீரவணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் பிரிவு நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் திருச்செங்கோடு எட்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து திருச்செங்கோடு நகரில் புதியதாக விரிவுபடுத்தப்பட உள்ள பேருந்து நிலையம் நகருக்கு வெளியே இருப்பதால் அது பொதுமக்களுக்கு பயன் தராது எனக்கூறி வருவாய் கோட்டாட்சியருக்கும் நகராட்சி ஆணையாளருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மனு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருச்செங்கோடு நகர தலைவர் செங்கோட்டுவேல் மாவட்டத் துணைத் தலைவர் ரமேஷ் மாவட்ட பொதுச் செயலாளர் தினேஷ்குமார், சுபாஷ், மாவட்ட செயலாளர் பூங்குழலி, மாவட்ட பொருளாளர் மகேஸ்வரன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் செந்தில், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் வேல்முருகன், அமைப்பு சாரா மக்கள் பிரிவு தலைவர் ஐய்யப்பன், ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ராஜ்குமார், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு தலைவர் சுரேஷ், எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய தலைவர் சங்கர் திருச்செங்கோடு வடக்கு ஒன்றிய தலைவர் பன்னீர், நகர பொறுப்பாளர்கள் சதீஷ் , பூபதி பாஸ்கர், ரவி, கோபி, சீனிவாசன், மோதிலால், மதியழகன், முத்துக்குமார், சேகர், பட்டியல் அணி நிர்வாகிகள் செங்கோட்டையன், பழனிவேல், சக்கரபாணி, பெரியசாமி, ராஜவேலு, பாமக நகரத் தலைவர் சுதாகர் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட காவி சொந்தங்கள் கலந்து கொண்டனர்
Next Story