கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒண்டிவீரன் 255-வது நினைவு நாள் அனுசரிப்பு !

X
தேச விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255-வது நினைவு நாள், கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் கணியூர் கலைஞர் சிலை வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சூலூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் சிபி. கே. செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் நல குழு தலைவர் சீராப்பாளையம் செந்தில், துனை அமைப்பாளர்கள் கே.பி. சண்முகம், செல்லை மணிமோகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட, ஒன்றிய மற்றும் ஊராட்சி கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, ஒண்டிவீரனின் போராட்டத் தொண்டுகளை நினைவுகூர்ந்தனர்.
Next Story

