உபரி தொகை 26 கோடி உள்ளது, ஏன் பயன்படுத்தவில்லை - செல்வப்பெருந்தகை

உபரி தொகை 26 கோடி உள்ளது, ஏன் பயன்படுத்தவில்லை - செல்வப்பெருந்தகை

உபரி தொகை 26 கோடி உள்ளது, ஏன் பயன்படுத்தவில்லை - செல்வப்பெருந்தகை 

அரசாங்கமா, தனியார் கம்பெணியா

உபரி தொகை 26 கோடி உள்ளது, மக்கள் பயன்பாட்டிற்கு ஏன் பயன்படுத்தவில்லை, ஆங்காங்கே சாலை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை

கமுக்கமா வச்சிருக்கீங்களா சட்டமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு கூட்டத்தில் சரமாரி கேள்வி செய்வதறியாது திகைத்து நின்ற வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர்


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினரும் , சட்டமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவருமான செல்வப் பெருந்தகை கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் வரவு செலவு கணக்கை வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் வளவன் வாசித்தார்.

வாசித்து முடித்தவுடன் செல்வப் பெருந்தகை ஒரு சில கணக்குகளை சுட்டி காட்டினார், உபரித்தொகை எவ்வளவு உள்ளது என்று கேட்டார் அதற்கு 26 கோடி இந்தியன் வங்கியில் உள்ளது என தெரிவித்தார். 26 கோடி ரூபாய் சும்மா வச்சிருக்கீங்களா, வல்லக்கோட்டை போனேன் ரோடு சரியில்லை, குடிநீர் வசதி இல்லை ஆங்காங்கே எதுவும் இல்லாம இருக்கு அங்கெல்லாம் பிரிச்சு கொடுக்கலாமே, இது என்ன அரசாங்கமா சாம்சங் கம்பெணியா எல்லாத்தையும் மறைப்பதற்கு நான் நினைச்சா உங்களுக்கு சஸ்பென்ட் இஷியூ பன்னலாம் தெரியுமா, என அடுக்கடுக்காய் கேள்வி எழுப்பினார். அவரது கேள்விகளுக்கு பதலளிக்க முடியாமல் மேலாளர் வளவன் தினறினார். இதனால் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story