இரு தரப்பு மோதல் 26 பேர் மீது வழக்கு

X
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் மகன் கந்தசாமி,53; இவரது தரப்புக்கும், அதே கிராமத்தை சேர்ந்த முனியன் மகன் பாலா தரப்பினருக்கும் முன்விரோதம் உள்ளது.இந்நிலையில் கடந்த 16ம் தேதி இரு தரப்பினருக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது தொடர்பாக கந்தசாமி அளித்த புகாரின் பேரில், முனியன் மகன் பாலா, ஆறுமுகம் மகன் மணிவாசகம், சம்பத் மகன் வேலுமணி உட்பட 21 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அதேபோல், மற்றொரு தரப்பை சேர்ந்த வேலுமணி அளித்த புகாரின் பேரில், வேலு மகன்கள் நிர்மல், முத்து, விமல் உட்பட 5 பேர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

