மத்திய அரசை கண்டித்து ஜனவரி 26இல் டிராக்டர் பேரணி தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!
Namakkal King 24x7 |22 Jan 2025 2:38 PM GMT
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில், வருகின்ற ஜனவரி 26ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில், வேலூர் சாலை காமராஜர் சிலை அருகில் இருந்து டிராக்டர் பேரணி புறப்பட்டு. இந்த பேரணி ஆரணி தலைமை அஞ்சலகம் வரை நடைபெறவுள்ளது.
மத்திய அரசைக் கண்டித்து வருகிற ஜனவரி 26ம் தேதி ஆரணி நகரில் டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.இது குறித்து நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.. மத்திய பாஜக அரசு கடந்த 2024- 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (எம்எஸ்பி) உறுதிப்படுத்தப்படும் என்று அறிவித்தனர்,ஆனால் இதுவரையில் எம்எஸ்பி அறிவிக்கவில்லை. இதனால் மத்திய அரசு விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருகிறது. மத்திய பாஜக அரசு எம்எஸ்பி அமல்படுத்தாமல் இருப்பதை கண்டிக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள விவசாய சங்க அமைப்புகள் அந்தந்த மாநிலத்தில் ஒன்றிணைந்து டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு மேலாக மழை, பனி, காற்று மாசு மற்றும் கடும் வெய்யிலின் தாக்கம் ஆகிய சிரமங்களை எதிர்கொண்டு, வட மாநில மற்றும் இதர மாநில விவசாயிகள், எம்எஸ்பியை உற்பத்தி செலவில் இருந்து 50 சதவீதம் உயர்த்தி, குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய கோரியும், விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட பேங்குகளில் வாங்கிய பயிர் கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய கோரியும், மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சட்டத்தைசீர்திருத்த சட்டத்திருத்தம் 2020 யை திரும்பப் பெறக் கோரியும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஒன்று திரண்டு போராடி வருகின்றனர்.நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மத்திய பாஜக அரசை கண்டிக்கும் வகையில் நடத்த உள்ள போராட்டத்திற்கு ஆதரவாக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில், வருகின்ற ஜனவரி. 26ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில், வேலூர் சாலை காமராஜர் சிலை அருகில் இருந்து டிராக்டர் பேரணி புறப்பட்டு. இந்த பேரணி ஆரணி தலைமை அஞ்சலகம் வரை நடைபெறவுள்ளது. எனவே மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளும் டிராக்டர் பேரணியில் தவறாமல் பங்கேற்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story