அன்னூர்: 26-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் - ஆட்சியர் தகவல்!

அன்னூர்: 26-ஆம் தேதி மக்கள் தொடர்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
X
கோவை மாவட்டம் அன்னூர் தாலுகா கரியாம்பாளையத்தில் வரும் 26-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் தாலுகா கரியாம்பாளையத்தில் வரும் 26-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தலைமை தாங்குகிறார். இந்த முகாமிற்கு முன்னதாக, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணி முதல் அனைத்து துறை அதிகாரிகளும் கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், அன்னூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கரியாம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெறுவார்கள். பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி மேற்கண்ட அலுவலகங்களில் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கலாம். பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் விசாரணை செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகளுக்கு 26-ஆம் தேதி நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பவன்குமார் இன்று தெரிவித்துள்ளார். எனவே, கரியாம்பாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து நிவாரணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story