முத்தூரில் 26 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

X

முத்தூரில் 26 நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் முத்தூர் அரசு கால்நடை மருத்துவமனையில் இலவச வெறி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆல்பர்ட் தியாகராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் முத்தூர் அரசு கால்நடை மருத்துவர் ந.மஞ்சுளா, முதுநிலை கால்நடை மேற்பார்வையாளர் இல.முத்துக்குமார் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் இரா.வீராசாமி, எஸ்.ரமேஷ் ராஜா மற்றும் மருத்துவ, செவிலியர் குழுவினர்கள் கலந்து கொண்டு முத்தூர் நகர சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளில் வளர்க்கப்பட்டு வரும் வளர்ப்பு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போட்டனர். இதன்படி முகாமில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 26 நாய்களுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி போடப்பட்டது. முகாம் நிறைவாக நாய் வளர்ப்பு பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
Next Story