அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை முழு நேர அரசு ஊழியராக்கி 26 ஆயிரம் வழங்கிடவேண்டும் என மாவட்ட மாநாட்டு வலியுறுத்தல்.

அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை முழு நேர அரசு ஊழியராக்கி 26 ஆயிரம் வழங்கிடவேண்டும் என மாவட்ட மாநாட்டு வலியுறுத்தல். பெரம்பலூர் சிஐடியு அலுவலகத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் ஐந்தாவது மாவட்ட மாநாடு இன்று நடைபெற்றது. இதில் மாநிலத்தலைவர் ரத்னமாலா தலைமை ஏற்று மாவட்ட மாநாட்டை துவக்கி வைத்தார். மாநிலத் துணைத் தலைவர் மணிமேகலை சிறப்புரையாற்றினார். மாநாட்டில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை முழு நேர அரசு ஊழியராக்கி 26 ஆயிரம் வழங்கிடவேண்டும் , பணிக்கொடை ரூபாய் 10 லட்சம் வழங்கவும், குடும்ப வரன்முறையுடன் கூடிய பென்சன் வழங்கிட வேண்டும், அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் 5 ஜி செல்போன்களையும், 5 ஜி சிம் கார்டையும் வழங்கிடவும், 93-ல் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு உடனே பதவி உயர்வு வழங்கிட வேண்டும், மே மாதம் கோடை விடுமுறையை ஒருமாத காலமாக வழங்கிட வேண்டும் என்பன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story

